• Thu. Jan 23rd, 2025

சேரனுக்கு ஜோடியாக கங்காரு நாயகி ஸ்ரீபிரியங்கா

பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீபிரியங்கா ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் என்ற படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு கங்காரு, வந்தாமல, பிச்சுவா கத்தி உள்பட பல படங்களில் நடித்தார். எந்த படமும் வணிகரீதியாக வெற்றியை பெறவில்லை. V.ஹவுஸ் புரடக்க்ஷன் தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளியான மிக மிக அவசரம் படம் அவருக்கு நல்ல பெயரையும், பரவலான அறிமுகத்தையும் பெற காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் சேரனுடன் இணைந்து நடிக்கிறார்.
இவர்களுடன் லால், துருவா தீபா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். நேற்று காலை இப்படத்தின் தொடக்க நிகழ்வு சாலிகிராமம் பிரசாத் லேப் விநாயகர்கோவிலில் படப்பிடிப்புடன் தொடங்கியது. இயக்குனர் வெற்றிமாறன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.