முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இந்தியாவ பிபின் ராவத் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட வீரர்கள், ராணுவ அதிகாரிகள் 14 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் காலமான நிலையில் இடைக்கால ஏற்பாடாக முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் முகுந்த் நரவானே ராணுவ தளபதியாகவும் உள்ளார்.முப்படைத்தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.