

‘‘8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கலோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார். மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று இரவு நேரில் பார்வையிட்டார்.
அமைச்சர் ஏ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் உடனிருந்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம் அடிக்கல் நாட்டி 40 மாதங்களை கடந்தும் ஒற்றைச் செங்க லோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ்… இரண்டும் மதுரையின் சாட்சிகள்’’ என்று தெரி வித்துள்ளார்.
