ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட வியாழன் கிரகத்தின் படத்தை நாசா விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து, விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து, 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மிக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, சமீபத்தில் படம்பிடித்த பிரபஞ்சத்தின் துவக்க கால புகைப்படங்கள் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தின. சென்ற மாத இறுதியின் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த நிலையில், தற்போது மற்றொரு படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தபடத்தில் பிரபஞ்சத்தின் அடர்ந்த இருளில் வியாழன் கிரகம் பிரகாசமாக ஜொலிக்கும் காட்சி அற்புதமானது.