• Thu. Dec 12th, 2024

நாளை பேருந்துகள் இயங்காதா..??

Byகாயத்ரி

Aug 23, 2022

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று காலை11 மணிக்கு 7ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியூ உள்ளிட்ட 65 சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நாளை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள், பேருந்து இயங்காது என தெரிகிறது.