• Wed. Dec 11th, 2024

பணப்பெட்டிக்கு காவல் காக்கும் ஜூலி!

பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது. போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்ற காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் அவர்கள் மிகவும் கவனமாக விளையாடி வருகின்றனர்.

கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறதை தொடர்ந்து நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகின்றார். தற்போது, ரம்யா பாண்டியன், சாண்டி மற்றும் சிலர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

இத்தகைய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் வீட்டில் நேற்றிலிருந்து பணப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தப் பணப்பெட்டி அருகிலேயே ஜூலி அமர்ந்துகொன்டு இருப்பது போன்ற ஒரு ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.