நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று “வாத்தி”. இந்த படம் தமிழ் -தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது. இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வாத்தி படத்தில் கருணாஸின் மகன் கென் கருணாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கென் கருணாஸ் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் அவருக்கு மகனாக சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதளவு பேசப்பட்டது.