

இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குககளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து முத்தையா அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாம். ஆர்யாவுக்கும் கதை பிடித்துவிட்டதாம். சார்பட்டா பரம்பரை வெற்றியை தொடர்ந்து முத்தையா படத்தில் நடிக்க அதிகமாக சம்பளம் கேட்டுள்ளாராம் ஆர்யா. ஆர்யா கேட்ட சம்பளத்தை கமல்ஹாசன் கொடுக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

