• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் அக்கட்சியில் இருந்து விலகல்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டி ஊர் முக்கியஸ்தரும், அதிமுக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான அம்மையப்பன் மற்றும் அவரது மனைவியும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான மலர்க்கொடி அம்மையப்பன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகதுணை

பொதுசெயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ..பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிமிநாதன் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து தங்களை திமுக உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி ஜெயக்குமார் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.