• Fri. Apr 19th, 2024

செம்பொன்நெருஞ்சியில் 2 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா!

Byமகா

Apr 20, 2022

விருதுநகர் மாவட்டம், செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் வழியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 1400 மாடுகள் முன்பதிவு செய்திருந்தனர். 200-க்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் முன்பதிவு செய்து இருந்த நிலையில் போட்டியை அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாண்குமார் தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் காளையாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

கொரோனா தொற்றால் 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாத நிலையில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டி நடைபெற உள்ளது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன், அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *