• Sat. Apr 20th, 2024

வேலை வாங்கித்தருவதாக கூறி சுகாதார ஆய்வாளர் மீது மோசடி புகார்!

Byகுமார்

Apr 20, 2022

விருதுநகர் மாவட்டம் கே. உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன். இவர் சென்னையில் வேலை தேடி அலைந்து போது பால்பாண்டி என்கிற சுகாதாரத்துறை ஆய்வாளர் அறிமுகமாகியுள்ளார். அவர் சென்னை துறைமுகத்தில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது நண்பரான சரவணன், குலசேகரபாண்டியனுடன் அறிமுகம் செய்து நாகராஜனிடம் 8 லட்சம் வாங்கி உள்ளனர்.

இதுதவிர சென்னை, தஞ்சாவூர், கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களிடமும் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 14 பேரிடம் மொத்தமாக ஒரு கோடியே 40 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடந்த இரண்டாயிரத்து 2017 இருந்து 2019 காலகட்டத்திற்குள் பணத்தை பலவிதமாக நேரடியாகவும் வங்கி பரிவர்த்தனை செய்துள்ளார்.

பணம் கொடுத்த நபர்களை நேர்காணல், மருத்துவ பரிசோதனை என பெங்களூர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று உள்ளார். மேலும் அதில் பலருக்கு போலி பணிச் சான்றிதழ்களையும் வழங்கி உள்ளனர். அதை அரசு அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை செய்த போது போலி என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தனர். அதன் பேரில் பால் பாண்டி, சரவணன், குலசேகரப்பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பால்பாண்டி தற்போது மதுரை மாநகராட்சியில் 91-95வது வார்டுகளுக்கான சுகாதார ஆய்வாளராக பால்பாண்டி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் மீது உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நாகேந்திரன் மதுரை மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *