• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரேஷனில் புதிய குடும்ப அட்டை இல்லாமலும் பொருள்களைப் பெறலாம்

Byவிஷா

Mar 14, 2024

புதிய குடும்ப அட்டைகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, அந்த விவரம் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதால், அதைக் காண்பித்து ரேஷனில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக, குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக, இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,409 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைதாரர்கள் அளித்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது.
எனவே, குடும்ப அட்டைகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அதனுடைய விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதால், அதை நியாயவிலைக் கடைகளில் காண்பித்து பொருள்களைப் பெறலாம் எனவும் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்புக்குப் பிறகு, பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.