சோழவந்தான் ஸ்டேட் பாங்க் முன்பாக திமுக மற்றும் இதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் திமுக நகரச் செயலாளர் சத்ய பிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைச்செயலாளர் ஸ்டாலின் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும்காங்கிரஸ் கட்சி தலைவர் முத்துப்பாண்டி, சிபிஎம் மாவட்ட குழு வேல்பாண்டி,சிபிஐ ஜோதிராமலிங்கம், தேமுதிக, மதிமுக, மக்கள் நீதி மையம், விசிக, ஆதிதமிழர் பேரவை, முஸ்லிம் லீக் உட்பட திமுக தோழமைக் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.




