• Fri. Oct 11th, 2024

கர்நாடகாவில் முதலமைச்சரை தள்ளிவிட்டது வேதனையாக உள்ளது-செல்லூர் கே.ராஜூ

ByKalamegam Viswanathan

May 22, 2023

திமுக கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர்.அவரை பதவியேற்பு விழாவில், தள்ளிவிட்டது பார்த்தால், சங்கடமாக உள்ளது. திமுக காரர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 50 லட்சம் மதிப்புள்ள சாலை பணிகள், சுகாதார நிலையங்கள், அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,ஆளுங்கட்சி ,பல்வேறு விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான், கவர்னர் மாளிகை நோக்கி அதிமுக, பாஜக ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளது.
வருகின்ற 22ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாங்கள் மனு கொடுக்க உள்ளோம்.
திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் 30ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. இதில், முதலமைச்சரின் மருமகன் சம்பந்தப்பட்டுள்ளார் என ,முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.
அன்று நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கூட்டணி கட்சியில் உள்ள திமுகவின் கூட்டணி கட்சியில் உள்ள கட்சியினர் அன்று ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார்கள். ஆனால், இன்று அமைதியாக உள்ளார்கள்.மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு செய்துள்ளதில் நாங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியதில்லை.மூன்று நான்கு மாதங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது. 2ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம்.ஏற்கனவே, பணமதிப்பிழப்பு என்பது திடீரென கொண்டு வந்தது. ஆனால், தற்போது கால அவகாசம் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் இந்த விவகாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது.தொண்டர்களுக்கு என்னை பார்த்து எந்த பயமும் கிடையாது. பொட்டு வைத்துள்ளேன்.குங்குமம் வைத்துள்ளேன்.
என் பின்னால் யாரும் அருவாள் வாள் வைத்துக்கொண்டு இல்லை. எனவே, எந்த தொண்டர்களுக்கும் எந்த பயமும் இல்லை.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று பணி செய்து கொண்டுள்ளோம்.மக்கள் தயாராக உள்ளார்கள் திமுகவிற்கு பதிலடி கொடுக்க உள்ளனர்.திமுக பொய் சொல்லி பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.வரலாறு காணாத அளவிற்கு கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு ஆளுங்கட்சி மந்திரி துணைப் போய் உள்ளார்கள். ஏறத்தாழ 22 நபர்கள் இறந்துள்ளார்கள் பலருக்கு கண் பார்வை போய் உள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் அறிவிக்கிறார். மதுரை சித்திரை திருவிழாவில் இறந்து போனவர்களுக்கு எந்த நலத்திட்டங்களும் அறிவிக்கவில்லை. முதலமைச்சர் எந்த கனவில் மிதக்கிறார் என்ன கனவில் இருக்கிறார். 10 லட்ச ரூபாய் கள்ளச்சாராயத்திற்கு இறந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். அவர்களை போய் நேரில் சந்திக்கிறார். கள்ளச்சாராயத்தை வித்தவருக்கு 50,000 பணம் கொடுத்து இருக்கிறார் என்று காரி துப்புகிறார்கள்.
மதுவிலக்கு துறை அமைச்சரின் செயல்கள் தான் தோன்றித்தனமாக தான் உள்ளது.குவாட்டருக்கு பத்து ரூபாயும், ஆப்க்கு 15 ரூபாயும் வாங்குகிறார்கள், எந்தஅதிகாரிகள் கப்பம் கட்டாதவர்கள் தூக்கி அடிக்கப்படுகிறார்கள்.
அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லப்படுபவர்கள் அதிகாரிகள் தான் ஆனால், அதிகாரிகளை மிரட்டுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. இந்த மாதிரி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் இந்தியாவிலும் ஆட்சி அமைக்கும் என கூறுகிறார்கள். கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர். மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.அதுக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு “பொதுவாக அகில இந்திய கட்சிகள் வழக்கமாக சொல்வது தான். அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நம்முடைய முதலமைச்சர் பார்த்திருப்பீர்களா..? பத்தோடு பதினொன்றாக, அத்தோடு இன்னொன்றாக அவரை தள்ளி விட்டுள்ளனர்.ஒரு முதலமைச்சருக்கு இவ்வாறு நடந்திருப்பதை கர்நாடக அரசு தமிழர்களை எவ்வாறு புறக்கணிக்கிறது, தமிழக மக்களை எவ்வாறு புறக்கணிக்கிறது என்பது தெளிவாகிறது. எங்கள் முதலமைச்சருக்கு இப்படி ஒரு அவமரியாதை ஏற்படுத்திய கர்நாடக அரசை கண்டிக்கிறேன். அவர் திமுக தலைவராக இருப்பதனால் மட்டுமல்ல தமிழகத்தின் முதலமைச்சர், எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக சென்றுள்ளார்.
அவரை பதவியேற்பு விழாவில் தள்ளிவிட்டது பார்த்தால் ,சங்கடமாக உள்ளது. திமுக காரர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது” என செய்தியாளர்கள் சந்திப்பில் ,
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *