மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது வார்டு உறுப்பினர் நூர்ஜகானை அவதூறாக பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நூர்ஜகான் கட்சியின் மேல் இடத்திற்க்கு கடந்த ஏப்ரல் மாதம் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக ஒழுங்கு நடவடிக்கையாக மத்திய மண்டல தலைவரின் கணவரும் முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.