• Thu. Apr 25th, 2024

மாற்றுத்திறாளிகளுக்கு கல்வி உதவித் தொகை…

Byகாயத்ரி

Apr 26, 2022

பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்த பின்னர் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு அங்கீகரித்துள்ள அனைத்துப் பட்ட வகுப்புகள் மற்றும் பட்டமேற்படிப்பு வகுப்புகளுக்கும் பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மாற்றுத்திறாளிகள் (சமவாய்ப்பு, உரிமைப் பாதுகாப்பு, முழு கங்கேற்பு) சட்டம் 1995 மற்றும் ஆட்டிஸம், மூளைப் பக்கவாதம், மனநலப் பாதிப்பு, பல்வித ஊனம் கொண்டவர்களுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டம் 1999, மற்றும் வழக்கத்தில் உள்ள ஏனைய சட்டங்களின்படியான மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும், 9,10,11,12 வகுப்புகளில் படிப்பதற்கும் பின்னர் டிப்ளமோ (பட்டயம்), பட்டம், முதுநிலைப் பட்டம் ஆகியவற்றைப் படிப்பதற்கும் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்திய குடிமக்களான மாணவர்கள் மட்டுமே இதற்குத் தகுதி உடையவர்கள். மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் துறையின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://scholarship.gov.in/இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *