• Fri. Jan 17th, 2025

அரசு கல்குவாரியில் கற்களை வெட்டி எடுத்து கேரள மாநிலத்திற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

ByJeisriRam

Jun 12, 2024

அரசு கல்குவாரியில் முறைகேடாக குத்தகை காலம் முடிந்த பின்னரும்
கடந்த ஐந்து மாதங்களாக உரிய அனுமதி இன்றி கற்களை வெட்டி எடுத்து கேரள மாநிலத்திற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

தேனி மாவட்டம், போடி தாலுகா, கோடாங்கி பட்டி அருகே சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் , மூன்று அரசு வருவாய் கல்குவாரி உள்ளது.

இந்த கல்குவாரி கடத 25. 1. 2019 முதல் 24 .1 .2024 வரை தனி நபர் அரசு கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து கற்களை வெட்டியை எடுத்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு அனுப்பி வைத்து வந்தனர்.

இந்த கல்குவாரி குத்தகை காலம் முடிந்த பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூபாய் 5 கோடிக்கு ஏலம் விடப்பட்டு மாவட்ட நிர்வாகம் குவாரி ஏலத்தை ரத்து செய்துள்ளது.

கடத்த 2019 ஆம் ஆண்டு ஏலம் எடுத்த நபர் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக அரசு கல்குவாரியில் உரிய அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்து இரவு பகலாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

கல்குவாரி முறைகேடாக செயல்படுவதாக தேனி மாவட்ட கல்குவாரி உரிமையாளர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துனர்.

இந்த கல்குவாரி செயல்படுவதற்காக கொட்டங்குடி ஆற்றின் குறுக்கே உரிய அனுமதியின்றி பாலம் கட்டியுள்ளார்,

இந்த கல்குவாரி தேனி – போடி ரயில் தண்டவாளம் அருகே தினதூறும் இரவு நேரங்களில் வெடி வைத்து கற்கள் வெட்டி எடுப்பதால் ரயில் தண்டவாளத்திற்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே உரிய அனுமதியின்றி அரசு கல்குவாரியில் கடந்த ஐந்து மாதங்களாக கற்களை வெட்டி எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறையினர், காவல் துறையினர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.