• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Aug 11, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்து வணிகர் சங்கம் சார்பாக சிவகாசி தொழில் துறை ஆய்வாளர் மயில்வாகனன் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களால் தீய விளைவுகள் ஏற்படுகின்றன.

ஆகையால் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் உறவினர்கள், நண்பர்கள், பயன்படுத்தவும் விடமாட்டோம் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்வோம்.

அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்குவோம் போதைப் பொருள் உற்பத்தி பயன்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்படுவோம், மக்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருப்போம், தமிழ்நாட்டில் போதைப்பொருள் வேறறுக்க தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என போதை தடுப்பு குறித்து உறுதிமொழியினை சங்கத்தின் சார்பில் செயலாளர் மணிசங்கர் வாசித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் வர்த்தக சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.