தேனி அல்லிநகரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஈபிஎப், பாதுகாப்பு உபகரணங்கள், சம்பளம் உள்ளிட்டவை உடனடியாக நிறைவேற்ற கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு பிரதி மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்காததை கண்டித்தும், நகராட்சி காண்ட்ராக்ட் நிர்வாகம் துப்புரவு பணியாளர்களுக்ஈபிஎப் வழங்க கோரியும், பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, உபகரணங்கள் வழங்க கோரியும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு கருவி, பணி பணிநிரந்தரம் செய்து, டெண்டர் முறையை ரத்து செய்து, நகராட்சி நிர்வாகம் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள், தனியார் ராம்கோ நிர்வாகம், நகராட்சி ஆணையாளரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.