• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் பிறந்த நாள்விழா நிகழ்வுகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் போல் தெரிகிறது..,

Byமுகமதி

Jun 25, 2026

தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்கள் இப்போது முதலமைச்சராக இருந்தாலும் அவர் திரைத்துறை நட்சத்திரமாக இருந்த காலம் தொட்டு அவருக்காகப் பிறந்த நாள் விழாக்களை நடத்தியதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.
அந்த வகையில் இதே புதுக்கோட்டைக்குள் ரசிகர்களாக மட்டுமல்லாது ரசிகர் நற்பணி மன்றங்களாகவும் தொடர்ந்து நடத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்தவர் என்று பார்த்தால் இப்போது தமிழக தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு முகம்மது பர்வேஸ் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

அப்போதும் இப்போதும் விஜய் ரசிகர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களாகவும் மாற்றியவர் என்ற பெருமையோடு அவர்களையெல்லாம் திறம்பட வழிநடத்தியும் வருபவர் மாண்புமிகு முகம்மது பர்வேஸ் அவர்கள்தான். அந்த வகையில்தான் திரைப்பட நடிகர் விஜய் அவர்கள் இப்போது மாண்புமிகு முதல்வர் என்ற உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் வேளையில் அவருக்காகப் பிறந்தநாள் விழாக்கள் நடத்துவதிலும் முதலிடத்தைப் பிடித்திருப்பது புதுக்கோட்டை மாவட்டம்தான்.
அப்படியாக புதுக்கோட்டை மாநகருக்குள் நடைபெற்ற பிறந்த நாள் விழாக்களில் ராஜகோபாலபுரம் அருகில் நடைபெற்ற சைவப் பிரியாணி மற்றும் கேசரி வழங்கும் விழாவை அப்பகுதியில் உள்ள தவெக தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த வகையில் அமைச்சர் முகம்மது பர்வேசின் வழிகாட்டுதலுடன் புதுக்கோட்டை மேற்கு மாநகரச் செயலாளர் ராஜாமுகம்மது, ரஞ்சித் விஜய், லியோராஜ், ராஜாராம், மேட்டுப்பட்டி மில்லர், பாண்டி, அபிநயா, சித்ரா, ரோஜா, பொன்மணி, ராஜேசுவரி, கர்ணன், சரவணன் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சைவப் பிரியாணியும் கேசரியும் வழங்கிச் சிறப்பித்தனர்.

ரஞ்சித் விஜயைப் போலவே திருவப்பூர் கேட் பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர் உதயா என்பவர் குளிர்பானம் போன்றவற்றை அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் திருவப்பூர் பகுதியில் இதுவரை திமுக, அதிமுக அரசியல்வாதிகளாலும் வருவாய்த்துறை போன்ற அரசுத்துறை அதிகாரிகளாலும் அடையாளம் காணப்படாமல் இருந்த ஒரு மாற்றுத் திறனாளிக்கு அவருக்கு உரிய மாற்றுத் திறனாளி வாகனம் ஒன்றை வழங்க ஏற்பாடுகள் செய்து அதனை மாண்புமிகு முகம்மது பர்வேஸ் அவர்கள்தான் வழங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அவரது கையாலேயே வழங்கி அந்தப் பயனாளியை மன நிறைவடையச் செய்தார் என்ற வகையில் உதயாவும் தனது நற்பணிகளில் ஒன்றாக இதைச் செய்து நிறைவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இதுபோன்ற சேவைகளில் ஒன்றாக புதுக்கோட்டை மாநகரின் நடுப்பகுதியான அண்ணாசிலைப் பகுதியில் குளிர்பானக்கடை வைத்து தொழில் செய்து வரும் சுரேஷ் என்பவர் இதற்கு முன்பு எந்தவொரு அரசியல் கட்சியிலும் இருந்ததில்லை. ஆனால் அவர் தொடக்கத்தில் இருந்தே விஜய் ரசிகராக இருந்து வந்திருக்கிறார். அந்த அடிப்படையில் விஜய் அவர்களின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனது குளிர்பானக்கடையின் முன்புறம் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைத்து அதில் வெறுமனே தண்ணீர் மட்டுமே வழங்காமல் பழச்சாறுகள், குளிர்பானங்களையும் தொடர்ந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து அதற்கான திறப்பு விழாவையும் ஏற்பாடு செய்து தனது விருப்பப்படி மாண்புமிகு முகம்மது பர்வேஸ் அவர்கள்தான் குத்து விளக்கு ஏற்றி வைத்து அதனைத் திறந்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திறக்கவும் செய்தார்.

அதன் திறப்பு விழாவில் சுரேஷ் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் மாண்புமிகு முகம்மது பர்வேஸ் அவர்கள் தான் குத்து விளக்கு ஏற்றியதோடு சுரேஷ் அவர்களின் துணைவியார், தாயார் என குடும்ப உறுப்பினர்களையும் குத்து விளக்கு ஏற்றச் செய்து அவர்களுக்கெல்லாம் பெருமையைத் தேடித் தரும் ஒரு விழாவாக அது அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இப்படியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகளால் மாண்புமிகு தமிழக முதல்வரும் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் முகம்மது பர்வேஸ் அவர்களும் பெருமைப் படுத்தப் படுவதோடு இந்த விழாக்களை ஏற்பாடு செய்த ரஞ்சித் விஜய், உதயா, குளிர்பானம் சுரேஷ் போன்ற அனைவரும் மற்றவர்களால் பெருமைக்குரியாவர்களாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.