• Sun. Sep 24th, 2023

விலை மதிக்க முடியாத பூமிக்கு இவ்வளவு பண மதிப்பா?

விலை நிர்ணயம் என்பது பொருட்களுக்கு மட்டுமே, இயற்கைக்கு விலை நிர்ணயிக்க முடியுமா?

முடியவே முடியாது என்ற நினைப்பை மாற்றுகிறது இந்த செய்தி…விலை மதிக்க முடியாத பூமிக்கு பண மதிப்பிட்டால் அது என்னவாக இருக்கும்? ஒரு சிறப்பு சூத்திரத்தின் மூலம், அறிவியல் பேராசிரியர் பூமியின் விலையைக் கணித்துவிட்டார்.நாம் வாழும் வீட்டின் விலையை தெரிந்து வைத்திருக்கிறோம்.

அதேபோல நாம் வாழும்பூமி கிரகத்தை எவ்வளவு விலைக்கு வாங்க முடியும்என்பதை அறிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை நிம்மதியாக வாழவும், எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் சொத்து வாங்க ஆசைப்படுகிறோம்.

சொத்துகளில் முதலீடு செய்கிறோம். உலகின் மிகப் பெரிய சொத்தான முழு பூமியையும் வாங்கலாம் என்று சொன்னால் நம்ப முடியுமா?

பூமியின் விலை ரூ.3,76,25,80,00,00,00,00,060 (3 லட்சத்து 76 ஆயிரத்து 258 டிரில்லியன்). உண்மையில் Treehugger.com சமீபத்தில் பூமியின் மதிப்பைக் கணக்கிட்டுள்ளது.

பூமி, நிலம், நதி, கனிமங்கள் மற்றும் அனைத்து பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் ரூ.3,76,25,80,00,00,00,00,060 (3 லட்சத்து 76 ஆயிரத்து 258 டிரில்லியன்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையுடன், நமது பூமிமுழு சூரிய குடும்பத்திலும் மிகவும் விலையுயர்ந்த கிரகமாக மாறுகிறது. அதாவது, உங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், நீங்கள் முழு பூமியையும் வாங்கலாம்.

விலை எவ்வாறு மதிப்பிடப்பட்டது?

கலிபோர்னியாவின் சர்சல் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணர் கிரெக் லாஃப்லின், கிரகத்தின் வயது, நிலை, தாதுக்கள், தனிமங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், விலையை மதிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன?

பூமியை யாராலும் வாங்க முடியாது என்பது எனக்குத் தெரியும் ஆனால் அதன் மதிப்பை மதிப்பிடுவதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. மக்கள் தாங்கள்வாழும் பூமிஎவ்வளவு மதிப்புமிக்கது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே, பூமிக்கு விலையை நிர்ணயித்த பேராசிரியரின் கருத்தாக இருக்கிறது.

உண்மையில், பூமி, நமக்கு இலவசமாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறது, அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்த விலை நிர்ணய கணக்கீடுகளை பேராசிரியர் கிரெக் (Astrophysicist Greg Laughlin) செய்துள்ளார்.

இந்த பேராசிரியர், பூமிக்கு மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் பல கோள்களின் விலையையும் பேராசிரியர் கணித்துள்ளார் என்று டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் கிரெக் கணக்கின்படி செவ்வாய் கிரகத்தின் விலை 12 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில், சுக்கிரனை மலிவான விலையில் வாங்க முடியும். சுக்கிரன் கிரகத்தின் விலை 70 பைசா மட்டும் தான். அது சரி, 70 காசுகளுக்கு கொடுத்தாலும் வெள்ளி கிரகத்தின் ஓனர் யார் என்று தெரிய வேண்டாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *