

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் ஆறு மாதங்களாக ஒரு தெருவிற்கு மட்டும் சாலை வசதி செய்து கொடுக்காமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கப்படுகிறது, இந்த கொடுமை எங்கு தெரியுமா? யார் இப்படி செய்கிறார்? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மட்டும் தான் இப்படி ஒரு நிலை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு.
அப்படி என்ன செய்கிறார்? பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி என்று அறிய பழனிசெட்டிபட்டி பொதுமக்கள் சிலரிடம் பேசினோம்..,


தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தெருக்களில் புதிய சாலை அமைக்கும் பணிக்காக ஃபேவர் பிளாக் கற்கள் எடுக்கப்பட்டு புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதில் சுகதேவ் தெருவில் மட்டும் கற்கள் எடுக்கப்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக சாலை பணிகளை மேற்கொள்ளாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இத்தெருவில் சாலை வசதி செய்து தராததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றோம்.
மேலும், தொடர்ந்து பேசிய பொதுமக்கள்..,
ரோடவே சரி செய்ய துப்பில்லை மேல என்ன பணி பார்க்கிறதுக்காக இங்க வந்து இருக்கீங்க என பேரூராட்சி நிர்வாகத்தில் வந்தவங்களையும் முற்றுகையிட்டோம். எங்க குறைகளை முழுசா தீர்த்து வைக்காததற்கு காரணமே எங்க பகுதியில் சேர்மனா உள்ள மிதுன்சக்கரவர்த்தி தான். எங்க குறைகள் தீர்க்காம ஒரு வேலை செய்ய விட மாட்டோம் என்றனர் பொதுமக்கள் வேகமாக.

இந்த குற்றச்சாட்டு குறித்து பழனிசெட்டிபட்டி நிர்வாகம் தரப்பில் விளக்கம் கேட்டபோது..,
சுகதேவ் தெருவில் ஒரு சில வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அதனால் சாலை வசதிகளை மேற்கொள்ளவில்லை என்றும், இன்னும் ஒரு மாதத்தில் அப்பகுதியில் சாலை வசதிகளை செய்து தரப்படும் என தெரிவித்தனர்.
ஏன் இப்படி செய்கிறார் மிதுன் சக்கரவர்த்தி பேரூராட்சி சேர்மன் பதவிக்கு பதவிப்பிரமாணம் எடுக்கும் போது, சொந்த இருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட தான் நடப்பேன் பொதுமக்களை காப்பேன் என சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டாரே அதை மறந்து விட்டாரா? என்று மக்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இது உண்மை தானே!

