

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இபிஎஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனு
இபிஎஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பேலீஸ்பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் மணிகண்டன் ஆன்லைன் மூலம் டிஜிபி ஆலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஆக.15க்கு பிறகு தென் மாவட்டங்களில் இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களால் (மறைமுகமாக ஓபிஎஸ் – அவரின் ஆதரவாளர்கள்) உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே போதுமான அளவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
