

22 ஆண்டுகள் வழக்கு நடத்தி ரூ20 மற்றும் இழப்பீடு தொகையும் பெற்று சாதித்திருக்கிறார் உ.பி.யை சேர்ந்த துங்காநாத் என்பவர்
வெறும் ரூ20 க்காக 22 ஆண்டுகள் வழக்கு நடத்தி வென்றிருக்கிறார் உ..பி. யை சேர்ந்த துங்காநாத் . இவர் கடந்த 1999ம் ல் மதுராவில் இருந்து மொராதாபாத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். அப்போது டிக்கெட் கட்டணம் ரூ70க்கு பதில் ரூ90 வசூல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் ரூ15000 இழப்பீடுடன்,கூடுதலாக வசூலித்த ரூ20ம் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறு தொகையாக இருந்தாலும் உறுதியுடன் போராடி தன் உரிமையை நிலைநாட்டிய துங்காநாத் பாராட்டுக்குரியவர்.
