• Tue. Dec 10th, 2024

மீண்டும் மாறுகிறதா டான் ரிலீஸ் தேதி?!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். டாக்டர் படத்திலும் அவர் தான் நடித்திருந்தார். வரும் மே 13 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் மே 5 ஆம் தேதியே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.