இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் இயக்குநர் கே.பாக்யரஜ். 80, 90 களில் முன்னணி இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் கே.பாக்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் 3.6.9. இப்படத்தில் சிவ மாதவ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், ‘இப்படம் நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் கின்னஸ் சாதனை படைக்கும் எனத் தெரிவித்தார். மேலும், இப்படத்திற்கு 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க, 75-க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நான் 21 ஆண்டுகளுக்குப் பின் ஹீரோவாக நடிக்கிறேன். நான் எப்போதும் ஹீரோதான் எனத் தெரிவித்தார்.