• Tue. Mar 25th, 2025

சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!

Byவிஷா

Jun 6, 2023

சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எம் பி எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த பயணிகள் சொகுசு கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார். இந்தக் கப்பல் சென்னையில் தொடங்கி இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா, திரிகோணமலை மற்றும் காங்கேசன் ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என சொகுசு கப்பல் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.