

தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1942 ல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார். பி. யு. சின்னப்பா பாடிய, கானடா ராகத்திலமைந்த, மோகனாங்க வதனி என்ற அந்தப் பாடலே மகாதேவன் முதன்முதலில் இசையமைத்த திரைப்படப் பாடலாகும். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது 1967ல் வெளிவந்த கந்தன் கருணை படத்திற்காக பெற்றார்.அதுமட்டுமில்லாமல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது, சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளையும் பெற்றார்.
இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.இசையின் அர்த்தமாய் விளங்கும் கே. வி. மகாதேவன் பிறந்த தினம் இன்று..!