• Mon. Apr 28th, 2025

சென்னையில் கால் பதித்த சர்வதேச சேட்டிலைட் நிறுவனம்

Byவிஷா

Apr 10, 2025

சர்வதேச ஷேட்டிலைட் நிறுவனமான எஸ்இஎஸ் நிறுவனம் சென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் தன்னுடைய ஐசிசி மையத்தை அமைத்திருக்கிறது. லக்சம்பர்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட இந்நிறுவனம் தற்போது இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.
சர்வதேச அளவிலான சேட்டிலைட் அடிப்படையிலான கன்டென்ட் மற்றும் கனெக்டிவிட்டி தீர்வுகளை வழங்கக்கூடிய எஸ்ஈஎஸ் நிறுவனம் சென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் தன்னுடைய ஜிசிசி மையத்தை அமைத்திருக்கிறது. இதன் மூலம் முதன்முறையாக இந்த நிறுவனம் இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த ஜிசிசி மையம் மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போதைக்கு முதல் கட்டமாக இந்த நிறுவனத்தில் 200 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 150 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பொது பொறியியல் அலுவலகமாகவும் பல்வேறு ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கூடிய அலுவலகமாகவும் சென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் அமைந்திருக்கக்கூடிய இந்த ஜிசிசி மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசிசி மைய திறப்பு விழாவில் தமிழ்நாடு ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். லக்சம்பர்க் நாட்டின் தூதர், எஸ்ஈஎஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஈஎஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி..,
லக்சம்பர்க் இல்லாமல் வேறொரு நாட்டில் எங்களுடைய திறன் மேம்பாட்டு கிளையை அமைக்க வேண்டும் என யோசனை வந்த போது முதலில் எங்கள் மனதில் தோன்றிய நாடு இந்தியா தான் என தெரிவித்துள்ளார் . இந்தியாவில் நாங்கள் பல்வேறு நகரங்களிலும் இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தோம் அப்பொழுது சென்னை திறமையான ஊழியர்களையும் உள்கட்டமைப்புகளையும் கொண்டிருப்பதை அறிந்து இங்கே எங்களுடைய ஜிசிசி மையத்தை நிறுவி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில் தொடங்க சாதகமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..,
தமிழ்நாட்டை போல எந்த பெரிய மாநிலத்தாலும் திறமையான மனித வளத்தை உருவாக்க முடியவில்லை எனக் கூறினார் . எஸ்ஈஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார். விமான போக்குவரத்து மற்றும் டெலி கம்யூனிகேஷன் பிரிவுகளுக்கு தேவையான பல்வேறு சேட்டிலைட் சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து எஸ்ஈஎஸ் நிறுவனம் ஏற்கனவே சேட்டிலைட் டிவி மற்றும் இ பேங்கிங், டெலி மெடிசன் சேவைகளை வழங்கி வருகிறது.