



மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பிலிருந்து தென் திருப்பதி செல்லும் சாலையில் எம்ஜிஆர் சிலை அருகில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேருக்கு மோதிய விபத்தில் மூவர் மரணம் அடைந்து விட்டனர்.

ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆட்டோ டிரைவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்டோவில் வந்த நான்கு பெண்கள் பலத்த காயங்களுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு நேரம் நடந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்து பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

