• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பல்லி இருந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை

By

Sep 15, 2021

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பெயின்டிங் வேலைக்கு சென்று வருகிறார்.இவரது மனைவி மேனகா இவர்களுக்கு பிரதீப் என்ற 12 வயது மகன் உள்ள நிலையில் இன்று காலை கடையில் tilo என்ற குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார்.

இந்நிலையில், பாட்டலின் அடியில் பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான் . இதனை பார்த்த சிறுவனது தாய் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.