• Sat. Apr 20th, 2024

தேனியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

தேனியில் விபத்து, வழிப்பறி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோடுகளில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சிசிடிவி (கண்காணிப்பு ) கேமராக்கள் பொருத்துப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனியில் புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், நேரு சிலை சந்திப்பு, கம்பம் மற்றும் பெரியகுளம் மெயின் ரோட்டில் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் மாவட்ட போலீஸ், நகர் நல கமிட்டி, முக்கிய பிரமுகர்கள் சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.


இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, ‘தேனி- மதுரை, தேனி – பெரியகுளம் ரோட்டில் அடிக்கடி வழிப்பறி, வாகன விபத்து போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இப்பணி இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு பெற்றுவிடும்’ என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *