உலகளவில் இன்று வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இல்லாத நிலையை பொது மக்களால் நினைத்துப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த சமூக வலைதளங்கள் முடங்கியது, அதற்கு இதன் உரிமையாளர்கள் மன்னிப்புக் கேட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, நேற்று நள்ளிரவு இன்ஸ்டாகிராம் செயலி திடீரென முடங்கியது. இதனால் அதன் பயனாளிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதற்கு அந்நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விரைவில் இந்த குறை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சில மணி நேரத்தில் இன்ஸ்டாகிராம் சேவை சீரானது என அந்நிறுவனம் தெரிவித்தது.