தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர்-விவேகானந்தர் இணைப்பு பாலம் பணிகள் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி கடல் நடுவே கடந்த 2000_ம் ஆண்டில். பல்வேறு தடைகளுக்கு பின் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட வான் தொடும் திருவள்ளுவர் சிலை, திறக்கப்பட்ட வெள்ளி விழா எதிர் வரும் (ஜனவரி1_2025)யில் கொண்டாடப்படும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கு பெற்று,
திருவள்ளுவர் சிலையை வணங்கி, சிலையின் கால் பாதங்களில் மலர் தூவும் நிகழ்விற்கு பின், திருவள்ளுவர் சிலை பாறை சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் பகுதியில் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைக்க இருக்கும் சூழலில், கடல் நடுவே நடைபெறும் பாலம் பணிகளை தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, முன்னாள் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜான், குமரி மாவட்டம் அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், ஆகியோர்களுடன் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.