• Fri. Dec 13th, 2024

பைக் சாகசம் செய்த ஐந்து இளைஞர்களுக்கு தலா ரூ.10.000 அபராதம்

குமரி வனத்துறை பகுதிக்குள் அனுமதி இன்றி சென்று பைக் சாகசம் செய்த ஐந்து இளைஞர்களுக்கு தலா ரூ.10.000 அபராதம் வனத்துறை அதிகாரி நடவடிக்கை எச்சரிக்கை அறிவித்தனர்.

விதிமுறைகளை மீறி குமரி மாவட்ட வனப்பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வன உயிரின் பாதுகாப்பு சட்டத்தின்படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனிவரும் காலங்களில் அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களோ, காணிகுடியிருப்பை சார்ந்த பழங்குடியினரோ வெளிநபர்களை அனுமதியின்றி வனப்பகுதிக்குள் அழைத்து வந்து தவறான நிகழ்வுகள் ஏதும் நிகழாத வண்ணம் இருக்கவும், இளைஞர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் வனவழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெற கூடாது என மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எச்சரிக்கிறது. மேலும் விதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு 1882 தமிழ்நாடு வசைசட்டம் மற்றும் 1972. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனவழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட வன அதிகாரி கூறியுள்ளார்.