

காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது.பர்மிங்காமில் நடைபெற்றுவரும் காமன் வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 55 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளது. தற்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. 18 தங்கம், 15 வெள்ளி ,22 வெண்கலப் பதக்கங்களை இந்தியா இதுவரை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டி இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் கடைசி நாளான இன்று 5 தங்கப்பதக்கங்களுக்கான போட்டியில் இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர்.இன்றும் மேலும் பதக்கங்களை இந்தியவீரர்கள் குவிக்க வாய்ப்புள்ளது.
