• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

அதிமுகவின் முதல் எம்.பி காலமானார்

ByA.Tamilselvan

Aug 9, 2022

அதிமுகவின் முதல் எம் பி. மாயத்தேவர் காலமானார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத்தேர்தலில் (திண்டுக்கல்) இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார். இரட்டை இலைசின்னத்தில் நின்று அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 88 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.