• Tue. Apr 22nd, 2025

மியான்மர் மீட்பு பணிகளில் ரோபோ பயன்படுத்தும் இந்திய ராணுவம்..,

புதுடெல்லி: மியான்மர் நிலநடுக்கத்தில் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் சிறு ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களை பயன்படுத்துகிறது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் சிறிய ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களை ஈடுபடுத்தியுள்ளது. கடந்த 28ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3600 பேர் உயிரிழந்தனர்.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு இடையே மக்கள் மற்றும் பிற வளர்ப்பு பிராணிகள், விலங்குகள் சிக்கியுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்காக நாயின் வடிவத்திலான சிறிய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவம் மீட்புப் பணிகளுக்காக ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலநடுக்கத்தில் மியான் மருக்கு உதவியளித்த முதல் நாடு இந்தியாவாகும்.