பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் மனிஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் அதானா வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. கலப்பு பிரிவு பாராலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் இந்தியாவின் சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில், 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்தனர்.
ஏற்கனவே, ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் 216.8 புள்ளிகள் பெற்று சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்தியாவின் அவானி லெகாராவைத் தொடர்ந்து, ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று சிங்ராஜ் அசத்தியுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் தொடரில், வரலாறு காணாத வகையில் இந்தியா பதக்க மழையை பொழிந்து வருகிறது. இதன்படி 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.