• Fri. Apr 19th, 2024

குமரி மாவட்டத்தில் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு, பேச்சிப்பாறை அணையில் 3000 கன அடி தண்ணீர் திறப்பு, திற்பரப்பு அருவி மூழ்கடித்து சென்றது தண்ணீர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளான கோதையாறு, மாறாமலை, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 48அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44அடியை எட்டியுள்ளது அணைக்கு 3400கன அடி நீர்வரத்து காணப்படுவதால் அணையிலிருந்து வினாடிக்கு 3000கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69 அணியை எட்டியுள்ளது. இதேபோல் 18அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1அணைக்கு நீர்வரத்து 1200கன அடியாக காணபட்டுவதால் அணியிலிருந்து வினாடிக்கு 1000கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பேச்சிப்பாறை, சிற்றாறு அணையிலிருந்து தண்ணீர் வெயியேற்றபடுவதால் கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதேபோல் கனமழையால் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவதால் கரையோர பகுதிமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *