வருமானவரி தாக்கல்செய்ய நாளை (ஜூலை.31)கடைசி நாள் மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 3 வருடங்களாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த வருடம் ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. . அதன்பின்னர் தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கல் – நாளை கடைசி நாள்
