

இன்று அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இன்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழா
கொடியேற்றத்துடன் துவங்கியது.


ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
