• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில், சுகாதார வளாக கழிவுநீரை அகற்றும் போது சுவர் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்

ByKalamegam Viswanathan

May 27, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நுளைவு வளைவு அருகே, மாநகராட்சி பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. ஒப்பந்ததாரர் கருப்பசாமி ஏற்பாட்டின் பேரில், சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மலைராஜ் (60) என்பவர் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சேதமடைந்திருந்த கழிப்பறை சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த மலைராஜ் சிக்கி, அருகிலிருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.

கட்டிட இடிபாடுகள் அவர் மீது சரிந்து விழுந்தது. இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, பள்ளத்தில் சிக்கியிருந்த மலைராஜை பத்திரமாக மீட்டனர். படுகாயமடைந்திருந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.