• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சேலத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

8 மணி நேர வேலை பணி நிரந்தர ஆணை, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

தமிழ்நாடு முழுவதும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக டாஸ்மாக் தொழிலாளர்கள் 18 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்தபட்ச ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும், 8 மணி நேர வேலை மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை அமல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்!

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.