• Tue. Dec 10th, 2024

மேலூரில் 1008 பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன்….

ByS.Durai

Aug 14, 2022

மதுரை மாவட்டம் மேலூர் நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் சார்பில், ஆடிப்பூரத்தையொட்டி 1008 கஞ்சி கலயம் ஊர்வலம் நடைற்றது.

மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் நலங்கள் யாவும் பெற்று சுபிஷ்சமாக வாழ வேண்டி நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள வழிபாடு மன்றத்தில் தொடங்கிய இந்த கஞ்சி கலய ஊர்வலத்தில் 1008 பெண்கள் கஞ்சி கலயத்தினை தலையில் சுமந்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்து வழிபாடு மன்றத்தை சென்றடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வழிபாடு மன்றத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.