அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் எஸ் .ஆர். பாஸ்கரன் தலைமை வகித்தார். கோவில்பட்டி நகர செயலாளர் பழனிச்செல்வன் முன்னிலை வகித்தார். விழாவில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, நகர துணை செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன், கிளை தொண்டரணி வீரய்யா, ஒன்றிய அவைத்தலைவர் பால்சாமி, சின்னமலை குன்று கிளை சிவச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.