காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குலில் பலியான தமிழக வீரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.மதுரை மாவட்டம் தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் டெல்லியிலிருந்து இன்று காலை 11மணிக்கு மதுரை வந்தடைகிறது. மாவட்ட கலெக்டர் காவல் அதிகாரிகள், பொதுமக்களின் அஞ்சலிக்குப்பின் ராணுவ மரியாதையுடன் லட்சுமணனின் உடல் அவரது தோட்டத்தில் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.