• Tue. Nov 3rd, 2026

மலம்பட்டி கிராமத்தில் நிலப்பிரச்சனை மதப் பிரச்சினையாக மாறிவிட்டது. கிராம மக்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்..,

Byமுகமதி

Nov 3, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மலம்பட்டி என்ற கிராமம் உள்ளது. கிராமத்தில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் குடியிருந்து வருகிறார்கள். அருகில் ஒரு சிறிய குன்று உள்ளது.

இந்த மலையில் சிமெண்டால் செய்யப்பட்ட சிலுவை ஒன்று நடப்பட்டு வைத்திருந்ததாகவும் அதை யாரோ உடைத்து விட்டார்கள் என்றும் முதலில் பிரச்சனை கிளம்பியது. அதைத்தொடர்ந்து இது சிலுவை மலை என்றும் இது கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தளமாகப் பார்க்கப்படுகிறது என்றும் பிரச்சனை கிளம்பியது. அதனைத் தொடர்ந்து இது சிலுவை மலை அல்ல லிங்கமலை என்றும் காலம் காலமாக இந்துக்கள் தான் அங்கு சென்று வழிபடுகிறார்கள் என்றும் பிரச்சனை கிளம்பியது.

இவ்வளவு காலம் ஒற்றுமையாக இருந்த அந்த மக்கள் அண்மையில் அந்த மலை அடிவாரத்தில் திருச்சியை சேர்ந்த பலர் இந்த கிராமத்து மக்களின் நிலங்களை விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்ய தொடங்கிய பிறகு தான் இந்த பிரச்சனை வந்தது என்று கிராம மக்களால் பேசப்பட்டது.

இதுகுறித்து கிறிஸ்தவர்கள் ஒரு புறம், இந்துக்கள் ஒருபுறம், நிலத்தை விலைக்கி வாங்கி ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் மக்கள் ஒரு புறம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தான் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் இருதயசாமி என்பவர் தலைமையில் ஒரு தரப்பினர் மனு கொடுக்க வந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்
இந்திய தேசிய கத்தோலிக்க சபையில் சார்பில் இங்கு மனு கொடுக்க வந்திருக்கிறோம். மலம்பட்டி கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் பூர்வீகமாக வசித்து வருகிறார்கள்.

இந்துக்கள் சுமார் 190 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இரு மதத்தை சேர்ந்தவர்களும் இதுவரை சுமூகமாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.
கடந்த நான்கு மாதங்களாக ஆர் எஸ் எஸ் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சிலரை தூண்டிவிட்டு எங்களது சிலுவை வழிபாட்டை செய்யவிடாமல் தடுக்கிறார்கள். அருகில் இருக்கும் மலை மேட்டில் ஏற்கனவே சிலுவை ஒன்று நட்டு வைத்திருந்தோம் அதை உடைத்து விட்டார்கள். அதன்பிறகு இரும்பினால் செய்யப்பட்ட சிலுவையை அங்கு கிராம மக்கள் நட்பு வைத்திருந்திருக்கிறார்கள்.

அது இறை வழிபாட்டில் நம்பிக்கைக்குரிய ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவர்களின் முக்கியத் திருநாளான கல்லறைத் திருநாள் நடத்துவதற்காக அந்த இடத்தை சுத்தம் செய்த போது இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை தூண்டிவிட்டதன் பேரில் சுற்றிலும் நாங்கள் இந்துக்கள் இருக்கும் போது கிறிஸ்தவர்கள் எவ்வாறு உள்ளே இருப்பது உங்களை இருக்க விடமாட்டோம் என்று சொல்லி அந்த திருவிழாவை நடத்த விடாமல் கிடைத்து விட்டார்கள்.

இந்தியாவில் இறையாண்மை காப்பதில் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதேபோன்று தமிழ்நாட்டில் உண்டு. இந்த நிலையில் இது குறித்து நாங்கள் எடுத்துச் சொல்ல முற்படும்போது கிறிஸ்தவர்களை கைது செய்து இப்போது வெளியில் விட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து புதுக்கோட்டைக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களிடம் மனு கொடுக்க நாங்கள் வந்த போது அதை கொடுக்க விடாமல் செய்து விட்டார்கள். எனவே இப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள்.