• Mon. Nov 2nd, 2026

புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் வருகை ; வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த பெண்..,

ByS. SRIDHAR

Nov 2, 2026

​புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைக்க உள்ள நிலையில், அவருக்கு வரவேற்பு அளிக்க திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பெண் ஒருவர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
​

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் வருகை தரவுள்ளார். அவரை காண்பதற்காகவும், உற்சாக வரவேற்பு அளிப்பதற்காகவும் அதிகாலை முதலே சிறியவர்கள், பெரியவர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு காத்திருந்தனர்.
​

இந்நிலையில், புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பெண், கூட்ட நெரிசல் மற்றும் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றியிருந்தவர்கள் சத்தமிடவே, அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
​

உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, மயக்கமடைந்த ஹேமா ஸ்ரீ மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.