• Wed. Dec 11th, 2024

இளையராஜாவின் கருத்து சரிதான் – ராதாரவி

பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் குறித்து இளையராஜா கூறிய கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து இசைஞானி இளையராஜா கூறியது சரிதான் என நடிகரும், பாஜக நிர்வாகியுமான ராதாரவி தெரிவித்தார். ஏற்கனவே அண்ணாமலை, குஷ்பு உள்பட பல பாஜக பிரமுகர்கள் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது ராதாரவியும் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.